“ஒரே நாடு ஒரே தேர்தல்”ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில சட்டப்பேரவை , மக்களவை என அடிக்கடி தேர்தலை நடத்துவதால் ஏற்படும் பண இழப்பு , அதற்கான நேரம் வீணாவது போன்ற காரணங்களை முன்வைத்து ஒரே தேர்தலை நியாயப்படுத்தி வருகின்றது மத்திய பாஜக அரசு.

இந்நிலையில் ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு  அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யபட்டு , அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர்  பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது தொடங்கிய இந்த கூட்டத்தில் தமிழகத்தை சார்த்த திமுக , அதிமுக கட்சிகள் பங்கேற்கவில்லை. அதே போல இஜ்ண்டிய தேசிய காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்றபோதும் இதில் பங்கேற்கவில்லை.