திடீரென உயிரிழந்த நடிகை…. இறுதிச் சடங்குக்கு பணம் இல்லாமல் தவித்த குடும்பம்…. உடனே உதவிய விஜயகாந்த்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் விஜயகாந்த். இவர் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அரசியலில் கவனம் செலுத்தி வந்த விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வருவதால் தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். நடிகர் விஜயகாந்த் வீட்டில் இருந்தாலும் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபு நடிகையாகவும் பாடகியாகவும் இருந்த தேனி குஞ்சரம்மாள் இறந்த போது அவருடைய இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனே 10,000 ரூபாயை அவரது குடும்பத்திற்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply