அந்த மனசுதான் சார் கடவுள்..! கிராமத்தில் தண்ணீர் தொட்டி அமைக்க சொந்த நிலம் வழங்கிய மாமனிதர்!!

நாகை அருகே மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் நடைபெற்ற சர்வதேச தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதில் தங்கள் பகுதியில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவி விமலா ராஜனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்ட இளங்கோ என்பவர் மேல் நிலை குடிநீர் தொட்டி அமைக்க தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை தருவதாக கூறினார். கிராம மக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி கட்ட தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியவருக்கு அப்பகுதி மக்கள் தங்களின் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.