தனுசு ராசிக்கு…உடல் சோர்வு ஏற்படும்…வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். குடும்பத்தாரிடம் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் வெற்றிக்கான படிகளில் ஏறி செல்லுங்கள். உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம். உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருங்கள். உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேகம் காணப்படும்.

சரக்குகளை அனுப்பும் பொழுது பாதுகாத்து வைக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறந்த காலங்கள் ஓரளவு பைசலாகும். உங்கள் பெயரை சிலர் குறை சொல்லக்கூடும்.  தேவையில்லாத வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம். அளவுடன் பேசுவது ரொம்ப நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மயில் நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மயில் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மயில் நீலம் மற்றும் நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *