தனுசு ராசிக்கு….! நேர்மை இருக்கும்….! புகழ் கூடும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! பாராட்டும் புகழும் கிடைக்கும்.

இன்று மற்றவரிடம் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். ஆனால் குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க நேரிடும். சந்தேக புத்தியை குறைத்துக்கொள்ளவேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத்தன்மை கண்டிப்பாக தேவைப்படும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையே உயர செய்வார்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளை கிடைக்க பெருவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை கண்டிப்பாக கிடைக்கும். அலுவலகம் மூலம் ஆதாயம் கிடைக்கும். உயர்வான பதவிகள் காத்திருக்கின்றது. நேர்மையான எண்ணங்களால் வாழ்க்கையை முன்னேறிச் செல்வீர்கள். பாராட்டும் புகழும் கிடைக்கும்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதையும் திட்டமிட்டு சிறப்பாக செய்வீர்கள். கம்பீரமாகப் பேசுவீர்கள். காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ள நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு மன மகிழ்ச்சி கொள்ளும் நாள். திட்டங்கள் யாவும் சிறப்படையும். இன்று காதல் விவகாரங்கள் சில நேரத்தில் கஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தினாலும் காதல் கண்டிப்பாக கைகூடும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *