தனுசு ராசிக்கு….! முன்னேற்றம் இருக்கும்….! நம்பிக்கை வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! உறவினர் மத்தியில் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது.

இன்று குடும்ப முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். இல்லத்தில் பரபரப்பான சூழ்நிலை இருந்த நிலை இப்போது மாறி விடும். எல்லாம் அமைதி நிலையை தேடிச்செல்லும். வாழ்க்கையில் மாற்றங்கள் என்பது கண்டிப்பாக இருக்கும். நம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள். இல்லத்தில் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சலும் கூடுதல் செலவையும் சந்திக்க வேண்டியிருக்கும். வேறு ஒருவர் செய்த செயலுக்கு நீங்கள் வீண் பழியை சுமக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தங்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

உறவினர் மத்தியில் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. உங்களை செயலிழக்க சில நபர்களால் முயற்சி செய்தாலும் அது முடியாத காரியம். கடன் பிரச்சினைகள் எல்லாம் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க கூடிய சூழல் இருக்கும். அதிக வட்டிக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். காதல் விவகாரங்கள் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தும். பொறுப்பான காதலாக இருந்தால் எல்லாம் சரியாகும். காதலை புரிந்துகொண்டு நடக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமல் செல்லும். கல்வியில் கவனம் எடுத்துக்கொண்டு முயற்சி செய்ய வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *