தனுஷின் “வாத்தி” பட வசூல்…. படக்குழு வெளியிட்ட புது அப்டேட்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” எனும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 17ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

அதன்பின் வாத்தி படம் உலகளவில் ரூ.100 கோடியை வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தின் புது வசூல் அப்டேட் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படம் உலகளவில் ரூ.118 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதை படக்குழுவானது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply