#ThankYouகலைஞர்….. ”இந்தியளவில் ட்ரெண்டிங்” மகிழ்ச்சியில் திமுகவினர்…!!

கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி #ThankYouகலைஞர்  என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாவதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை அனுசரித்து வருகின்றனர்.

இதற்காக சென்னை வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.மெரினா-வில் நிறைவடைந்த இந்த பேரணியில் துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, உதயநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின்னர் திமுக நிர்வாகிகள் கருணாநிதியின் சமாதிக்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினார். இதை தொடர்ந்து திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவையொட்டி ட்வீட்_டரில்  #ThankYouகலைஞர்  என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாகி வருகின்றது. இது திமுகவினர்க்குக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.