தினமும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டி கேராள முதல்வருக்கு கடிதம் எழுத இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியது. இதற்க்கு அனைத்து தரப்பிலும் இருந்தும் கேரள அரசுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் இருந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக தமிழக அரசு கேரளாவில் இருந்து வழங்க இருக்கும் தண்ணீர் வேண்டும் என்று நிராகரித்தது.

தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சியடைய வைத்தது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழக அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் குடிநீர் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் , கேரள கொடுத்த குடிநீர் போதுமானதாக இருக்காது. தமிழகத்துக்கு குடிநீர் தருவதாக கூறிய கேரள அரசுக்கு நன்றி. எங்களுக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்று தெரிவித்தார்.