தங்க தமிழ்செல்வன் தி.மு.கவில் இணைந்தார்..!!

அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ் செல்வன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து திமுகவில் இணைந்தார். தங்க தமிழ் செல்வனுடன் சேர்ந்து தேனி மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது முதல், தங்க தமிழ் செல்வன்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்துவது வரையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.