தமிழகத்தில் ஐடி துறையில் இந்த திட்டங்கள் விரைவில்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி….!!!!

டெல்லி பிரகதி மைதானத்தில் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று பங்கேற்று உரையாற்றினார். அந்த துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தலும் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா மாநில ஐடி அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள் இந்த Digital Initiatives பற்றி பேசினார்கள். அதனைத் தொடர்ந்து உண்மையில் கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய முதல்வர் தலைமையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னேடுப்புகளை பலரும் பாராட்டினார்கள்.

ஏனென்றால் தமிழகத்தின் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் கடைசி மைல் இணைப்பு என்று செல்வோம். அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவைகள் தடை இன்றி கிடைப்பதற்கான முயற்சி தமிழக கண்ணாடி இழை வளையமைப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனைபோல  எல்லா மக்களுக்கும் இணைய வழி வசதிகள் ஆன்லைனில் அரசினுடைய சேவைகளை பெறுகின்ற வசதி இ-சேவை மூலமும் ஒவ்வொரு அலுவலகத்திலும், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் “மின் அலுவலகம்” மூலமாக இணைப்பது, e-Office திட்டத்தினை மாநிலம் முழுவதும் நடைமுறை படுத்துவது மட்டுமில்லாமல் தரவுகளின் அடிப்படையிலான அரசு தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டுகின்ற திட்ட உதவிகள் கொடுக்கின்ற அந்த திட்டம் போன்றவை மிகுந்த வரவேற்பை இங்கு பெற்றிருக்கிறது.

இதுபோன்று தமிழகத்திலே தொழில் முனைவோர், புதுமையான முயற்சிகள் போன்றவற்றிற்கு அளித்து வரும் முக்கியத்துவம் அங்கு இருக்கக்கூடிய நல்ல ஒரு சூழலை ஏற்படுத்துகிறது. இந்த மாநாடு மூலம் பல்வேறு மாநிலங்களில் எப்படி ஐடி துறை செயல்படுவது என்பதை நாங்கள் கவனமாக கணிக்க முடிந்தது. இதனையடுத்து இன்னும் தீவிரமாக ஒரு புது உத்வேகத்தோடு நமது மாநிலத்தில் நல்ல முறையில் பணியாற்றி இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பயன் சாதாரண மக்களுக்கு கூட கிடைக்கின்ற விதத்தில் நம்முடைய அரசு பணிகளையும், அரசினுடைய செயலையும் அதிகமாக Degitalise பண்ணுகின்ற முயற்சியை நாம் மேற்கொள்வோம் என்று கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.