தமிழகம் முழுவதும் ரத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மது கடை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது கடந்த ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் செய்தியாளர்களிடம் கூறியது , கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 5570 வழக்குகள் முன்னதாகவே திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட 446 வழக்கங்களும் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும் மொத்தம் 868வழக்குகளை வாபஸ் பெற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *