தமிழகம் முழுவதும் 1,000 அரசு பள்ளிகளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 37,000 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 59,000 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 6200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. மேலும் இந்த பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் காலியிடங்களுக்கு புதிய நியமனம் அல்லது பதவி உயர்வு முலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் ஆகிய வழிகளில் இடம் மாறிய ஆசிரியர்களின் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

அதன்படி 700 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 300 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் பணிகளை 10 மற்றும் 12ஆம் வகுப்பு நடத்துகின்ற மூத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டு விரைவாக பாடங்களை நடத்த வேண்டும் என்று கட்டாயம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை ஆசிரியர்களின் பொறுப்பையும் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியும் பார்க்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் 1000 பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் கற்பித்தல் குறைந்த தேர்ச்சியால் பாதிக்கப்படும். மேலும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *