தமிழக மக்களே இனி இவ்வாறு நடக்காது…. உறுதி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  வந்த சில மாதங்களில்  மின்வெட்டு பிரச்சினை மீண்டும் வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்ந்து நடைபெறுகிறது என்று மின்சாரத்துறை செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் மின் வயர் அறுந்து விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் நேற்று மின் வயர் அறுந்து விழுந்து விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனை போலவே இந்த மாவட்டத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து 6 சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்றும் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் சீராக மின்வினியோகம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இதையடுத்து எதிர்காலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த மின் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைப்போலவே ஆலைகள் மின் இணைப்பு பெற  விண்ணப்பித்தால் மறுநாளை மின் இணைப்பு  வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *