தளபதி விஜய் சொன்னன அந்த ஒரு வார்த்தை?…. இன்ப அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் பாபு ஆண்டனி உட்பட பலர் நடிக்கின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழில் சத்யராஜின் பூவிழி வாசலிலே, பேர் சொல்லும் பிள்ளை, சூரியன் உட்பட பல திரைப்படங்களில் வில்லனாகவும், தற்போது குணசித்திர நடிகராகவும் நடித்து வரும் பாபு ஆண்டனி தன் சோஷியல் மீடியா பக்கத்தில் லியோ சூட்டிங் தளத்தில் தளபதியுடன் பேசியபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார். அதாவது “தளபதி விஜய் சார் மிகவும் பணிவாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். இதனிடையே நான் நடித்த பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களை தளபதி மிகவும் ரசித்ததாகவும், அவர் எனது ரசிகர் எனவும் கூறினார். தளபதி இவ்வாறு கூறியது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் படகுழுவினர் அனைவரும் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டனர்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.