Thalapathi-67: இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் இணையும் ‘தளபதி 67’..! எகிற வைக்கும் எதிர்ப்பார்ப்புகள்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. லோகேஷின் முந்தைய படங்களான கைதி, விக்ரம் வரிசையில் இந்த படமும் உருவாக உள்ளது. கமல்ஹாசன், கார்த்தி, சூர்யா, பகத்பாசில், விஜய் சேதுபதி, நரேன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் தளபதி 67 திரைப்படத்திலும் தொடர உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் சஞ்சய் தாஸ், நிவின் பாலி என பிற மொழி நடிகர்களும் இணைய உள்ளதாக அடிபடும் தகவல்கள் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. மேலும் திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் நடிப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சியான் விக்ரமும் படத்திலும் எல்சிவியூவிலும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply