“தளபதி 67” படத்தில் இணைந்த KGF வில்லனுக்கு…. எவ்வளவு கோடி சம்பளம் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, மேத்திவ் தாமஸ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் தளபதி-67 திரைப்படத்தில் சஞ்சய் தத் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் நடிக்க சஞ்சய் தத் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதியாக சஞ்சய் தத் நடித்த கேஜிஎஃப்-2 திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்துள்ளதால், தளபதி 67 படத்துக்கு அவருக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.