“அதிரடியாக விளையாடிய தோனி “வங்கதேச அணிக்கு 360 ரன்கள் இலக்கு ..!!

உலகக்கோப்பைக்கான 10வது பயிற்சி ஆட்டத்தில் தல தோணி அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார் .

உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதியது .

இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய தல தோனி 78 பந்துகளில் 113 ரன்களும் ராகுல் 108 ரன்களும்  எடுத்துள்ளனர். கடந்த விளையாட்டில் இந்தியாவின் பேட்டிங் திறமையை இதனோடு ஒப்பிடும் பொழுது அபார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.