“விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்த தல அஜித்”…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ள ஒரு போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் ரசிகர் ஒருவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் நிலையில் முன்பை விட அவர் சற்று உடல் எடை மெலிந்திருப்பது தெரிய வருகிறது. மேலும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply