தல அஜித் நடிக்கும் “துணிவு”…. பொங்களுக்கு வராதாம்…. புதிய ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் துணிவு திரைப்படத்தில் மஞ்சுவாரியார் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகும் என இணையதளத்தில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது.

தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அஜித், விஜய் ரசிகர்களிடையே மோதல் நடந்து வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை விநியோகஸ்தர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது, 2 படங்களும் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீசாகாது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப் பட்டதால் அது பொங்கலுக்கு ரிலீசாகும். அதேசமயம் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகாது. மேலும் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது தல, தளபதி  ரசிகர்களிடைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.