சுவைக்க தூண்டும் சில்லி முட்டை மசாலா.. இது கூட சாப்பிட்டா இன்னும் பிரமாதம்..!!

தேவையான பொருட்கள்:

  • முட்டை                                                      –  2
  • எண்ணெய்                                             –  தேவையான அளவு
  • வெங்காயம்                                           – 1
  • பச்சை மிளகாய் பேஸ்ட்                  – 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் பேஸ்ட்                – 1 ஸ்பூன்
  • சோயா சாஸ்                                          – 1 ஸ்பூன்
  • புளிக்கரைசல்                                       – 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது                         – 1 ஸ்பூன்
  • உப்பு                                                           – தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி                                        – சிறிதளவு

 

செய்முறை:

முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து சுத்தம் செய்து முட்டையை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எஎண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  வதக்கவும்.

வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் காய்ந்த மிளகாய் பேஸ்ட் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கலந்து விடவும்.

அத்துடன் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

இந்த கலவையுடன் இரண்டாக நறுக்கிய முட்டையை சேர்த்து அதன்மேல் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறினால் சுவையான சில்லி முட்டை மசாலா ரெடி.

இது தயிர்சாதம் மற்றும் சாம்பார் சத்தத்துடன் சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *