தடம் புரண்ட ரயில்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

சரக்கு ரயில் தடம் புரண்ட காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முகுந்தராயபுரம் ரயில் தண்டவாளங்கள் ஏற்றிச் செல்வதற்காக 5 பெட்டிகளுடன் சரக்கு ரயில் பணிமனை பகுதியிலிருந்து சென்றுள்ளது. அப்போது என்ஜின் மூன்றாவது பெட்டியின் பின்பக்கம் இருந்து 4 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது.

இதனை அறிந்த சரக்கு ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து திருத்தணி மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்கள் 25 நிமிடங்கள் காலதாமதமாக சென்றிருக்கிறது. மேலும் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *