டெஸ்ட் அணியில் ரஹானே நீடிப்பாரா ….? போட்டு உடைத்த விராட் கோலி….!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானே நீடிப்பது குறித்து  கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்  .

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது .இதனிடையே அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது .இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .ஏனெனில் ரஹானே கடைசியாக விளையாடிய 23 டெஸ்ட் இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதே போல் 2 முறை அரைசதம் அடித்துள்ளா.ர் தற்போது அவர்  மோசமான பார்மில் இருப்பதால் அணியில் தொடர்ந்து விளையாடுவாரா  என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரஹானே அணியில் நீடிப்பாரா , மாட்டாரா என்ற கேள்விக்கு  கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” நான் மட்டுமல்ல யாராலும் அவருடைய ஃபார்ம் குறித்து முடிவுக்கு வர முடியாது .மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு முக்கியமாகும் .அதோடு முக்கியமான போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார் .தற்போதைய சூழலில் அவருக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த சிக்கலான சூழலில் அவருக்கு பக்கபலமாக நிற்க வேண்டும். தனி ஒருவர் மீது வைக்கப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக ஒரு அணியாக எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *