ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் சாஹிப் என்ற பகுதியில் இருக்கும் பட்போர்-நர்வானி என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையறிந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் , பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். தீவீரவாதிகளுக்கும் ,பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடந்த இந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த சமீர் என்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் . அவனிடம் இருந்த ஆயுதங்களையும் , வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்யப்பட்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.