பயங்கரவாதி ஊடுருவல்….. ”2000 போலீசார் குவிப்பு”…. பரபரப்பாகும் கோவை…!!

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவதாக மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து கோவையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்றும்  தமிழக டிஜிபி_க்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.  இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் ஆணையர்கள் , எஸ்பிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா தாக்குதல் எச்சரிக்கை என்பதால் கோவை மாவட்டம் முழுவதும் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Image result for லஷ்கர்  கொய்தா தீவிரவாத அமைப்பு

குறிப்பாக ஊடுருவும் லஷ்கர் கொய்தா தீவிரவாதிகள் 6 பேரும் கோவையில் பதுங்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை எழுந்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் நேற்று இரவே வெடிகுண்டு நிபுணர்கள் , மோப்ப நாய்கள் கொண்டு வந்து  சோதனை மேற்கொள்கின்றனர்.பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் , கோவை  மத்திய ரயில் நிலையம் , பேருந்து நிலையம்,  சிங்காநல்லூர் பேருந்து நிலையம்,  காந்திபுரம் பேருந்து நிலையம் என அங்குள்ள பயணிகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

Image result for போலீஸ் சோதனை

கோவையில் உள்ள அனைத்து மால்கள்  லாட்ஜ்களில் சோதனை நடைபெறுகின்றது. கோவை காந்திபுரம் , டவுன் ஹால் , உக்கடம் ,  அவினாசி சாலை , திருச்சி சாலை , கோவை புறநகர்ப் பகுதி என செக்போஸ்ட் அமைக்கப்பட்டு நகரங்களில் 1000 போலீசாரும் , புறநகரப் பகுதியில் 1000 போலீசாரும் என கோவையில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மண்டல   ஐ.ஜி பெரியய்யா நேற்று இரவே கோவை தமிழக எல்லையில்  கண்காணிப்பை மேற்கொண்டார். அதே போல கோவையில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.