“திருவாரூரில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை “கலெக்டர் ஆனந்த் அதிரடி உத்தரவு !!..

திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் 

திருவாரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான  தடுப்பு நடவடிக்கையை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் அதன்படி 44 கிராம ஊராட்சிகளில் கொசு உற்பத்தியை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதுகுறித்து அவர் கூறியதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று சுத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் அனைத்து நீர் தொட்டிகளில் இருந்தும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது மேலும் வீடுகளுக்கு அருகில் உள்ள தேவையற்ற பொருட்களான  பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டைகள் போன்றவை அகற்றப்பட்டு வருகின்றன  மேலும் டெங்கு குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது மேலும் அரசு சார்பில் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விழிப்புணர்வை பயன்படுத்தி டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்