அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் சில உறுப்பு கல்லூரிகளில் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதைப்போல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் விழுப்புரம், ராமநாதபுரம், ஆரணி, திண்டிவனம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருக்குவளை போன்ற இடங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் சில இடங்களை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply