நடைபெற்ற அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன், செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியுள்ளார். இந்த விழாவில் பக்தர்கள் கோஷமிட்டு வடம் பிடித்துள்ளனர். இத்தேர் முக்கிய வீதிகள் வழியாக இரவு 7 மணி அளவில் கோவிலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தேரோட்டத்தில் வானவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.