ஆதிபராசக்தி கோவிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குட்டை குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதி பராசக்தி அன்னை திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவினை நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 26-ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2-ம் கால வேள்வி பூஜை மற்றும் 3-ம் கால வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
அதோடு இதன் முக்கிய நிகழ்வான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்றுள்ளனர்.