“வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது”… சந்திரபாபு நாயுடு பேட்டி.!!

வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார். 

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும்,  அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும்  புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.

Image result for Telugu Desam leader Chandrababu Naidu says he cannot control me because of house arrest

 

இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு வீட்டுக் காவலில் வைத்துள்ளது. ஆந்திராவில் நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும்  போலீஸ் கைது செய்துள்ளது.

Image result for chandrababu naidu, former andhra pradesh chief minister and telugu desam party leader put under house arrest

பேரணிக்கு செல்ல விடாமல் அவரது வீட்டின் கேட்டை போலீசார் பூட்டிய நிலையில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்ததாவது, “வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது. ஜெகன்மோகன் அரசு அடிப்படை உரிமைகளை மீறுகின்றது. என்னை வீட்டுக்கு வெளியே வர அனுமதிக்கும் போது பேரணியை தொடங்குவேன் என்றும் அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *