பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் காலமானார்.!!

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார்.

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  உடல்நலக் குறைவால் காலமானார். 39 வயதான வேணு மாதவ் கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வேணு மாதவ்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Image result for வேணு மாதவ்

நகைச்சுவை நடிகர் வேணு மாதவ்  தெலுங்கில் போக்கிரி, ருத்ரமாதேவி, பிருந்தாவனம் உட்பட 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ‘என்னவளே’, ‘காதல் சுகமானது’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *