WhatApp மூலம் உடனே சொல்லுறாங்க… எங்ககிட்ட இருக்குற ஒரே பிரச்னை அதான்… உதயநிதி பரபரப்பு பேச்சு!!

மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான அரசு திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் எங்கள் ஆட்சியில் சொன்னதையெல்லாம் செய்து,  சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். எங்க கிட்ட இருக்குற ஒரே பிரச்சனை…  அதை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்காதது தான்.

எங்களோட சாதனையை கொண்டு போய் சேர்க்கறதுக்கு முன்னாடி,  எங்களுடைய எதிர்க்கட்சிகள் வாட்ஸ் அப் மூலமாக எங்களைப் பற்றி அவதூறுகளை கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். அதுதான் எங்க கிட்ட இருக்கிற ஒரே பிரச்சனை. இந்த 21 மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு இருந்த பொழுது என்ன செய்தது ? லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்களையும்,  காலியான கஜானாவையும்,  அடிமை அரசு என்ற அவப்பெயரை மட்டுமே விட்டு சென்றது கடந்த அதிமுக அரசு.

தடுமாறி கிடந்த தமிழ்நாட்டு அரசை தலை நிமிர செய்தது நம்முடைய முதலமைச்சர் அவர்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதும் அவர் இட்ட கையெழுத்தில் மிக மிக முக்கியமான கையெழுத்து என்னவென்று கேட்டால் ? தேர்தல் வாக்குறுதியிலே சொன்ன…. பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயணம் என்பதுதான்.  நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து அது தான். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எவ்வளவு கட்டணம் மிச்சமாகிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை,  உங்களுக்கே தெரிந்திருக்கும்.

மதுரையில் மட்டும் இதுவரை 11,614 சுய உதவி குழுக்களுக்கு 645 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை நம்முடைய அரசு வழங்கி உள்ளது. பெண்கள் என்பவர்கள் படிப்பிலும், உழைப்பிலும் ஆண்களை விட ஒரு படி மேலே இருக்கிறீர்கள். தோல்வியை வெற்றியாக்கும் மனப்பான்மையை உங்களிடத்தில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.