போலீஸ் கிட்ட சொல்லி…. Fine போட்டு… Action எடுங்க… கோட்டையில் எகிறிய செந்தில்பாலாஜி…!!

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாக தெரியும்படி மதுபான கடையில் முன்புறத்தில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உள்துறை செயலாளர் அமுதா, டாஸ்மார்க் இயக்குனர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதே போல DM  என்று சொல்லக்கூடிய டிஸ்ட்ரிக்ட் மேனேஜரும் பங்கேற்றனர். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இதில் மாவட்ட மேலாளர்கள்,  தங்கள் மாவட்டங்களில் சட்ட விரோதமாக மது கூடங்கள் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடம் செயல்படும் பட்சத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதை கண்டறியவும் – மதுபான கடைகளை தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களை  கண்டறிந்து காவல்துறைக்கு தெரிவித்து,  காவல்துறை காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

மாவட்ட மேலாளர்கள் தினந்தோறும் எந்த ஒரு மாவட்டத்திலும் மதுபான வகைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலையை வைத்து விற்பனை செய்யக்கூடாது. இதில் ஏதேனும் விதிமீறல்  இருந்தால் இது குறித்து அபதாரம் வசூலிக்க வேண்டும். அப்பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளும் செவ்வனே செயல்படுத்தி சிறப்பாக செயல்பட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் அறிவு வழங்கபட்டுள்ளது.

Leave a Reply