அமைச்சரே.. முதல்வரே.. ”எது உண்மை , எது பொய்” பதில் சொல்லுங்க… ஸ்டாலின் வேண்டுகோள் …!!

ராஜேந்திர பாலாஜியும் , முதல்வரும் முரண்பாடாக பேசுவதை மக்களிடம் விளக்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் உள்ள சமாதான புறத்தில் இருக்கும் ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் கூட்டுறவை பொருத்தவரைக்கும் அதிக லாபத்தில் இயங்குகிறது என்ற பெருமையோடு சொல்கிறார்.

Image result for rajendra balaji , stalin , palanisamy

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி  நஷ்டத்தில் இயங்குகின்றது என்று சொல்கிறார்.அவர்களுக்குள்ளே முரண்பாடு இருக்கிறது. எது உண்மை எது பொய் என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்  என்று தெரிவித்தார். ஆட்சியாளர்கள் செய்து கொண்டு இருக்கின்றவர்கள்  ஊழல், லஞ்சம், கொள்ளை என அனைத்தையும்  மூடி மறைப்பதற்கு  மாவட்டங்களை பிரிக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.