தெலுங்கானா பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் மாயம்…!!

தெலுங்கனா கம்மம் மாவட்டத்தை  சேர்ந்த பாஜக தலைவர் மகன் இங்கிலாந்தில் படித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.  

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாஜக தலைவராக இருக்கும் உதய் பிரதீப் என்பவரின் 23 வயதான மகன் உஜ்வால் ஸ்ரீஹர்ஷா, இங்கிலாந்தின் இயந்திர கற்றல்  மற்றும்  செயற்கை நுண்ணறிவியலில்  எம்.எஸ் பயின்று வருகிறார். இவர் இங்கிலாந்திற்கு படிக்க  சென்றதில் இருந்து தினமும் பெற்றோருடன் தொலைபேசி வாயிலாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து பேசவே இல்லை.

Image result for Ujwal Sriharsha

இதையடுத்து சந்தேகமடைந்த உதய் பிரதீப், மகன் மாயமானது தொடர்பாக லண்டன் போலீசாரை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது கடற்கரை அருகே அவரது பை  கிடந்தது என்று  போலீசார் தெரிவித்தனர். இதனிடையே மத்திய உள்துறை அமைச்சரான கிசான் ரெட்டி இந்த விவகாரத்தில் உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.