நடைபெற்ற டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி…. மதுரை மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை….!!

தேசிய அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தனர்.

பெங்களூரில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் பூம்சே, க்யூரூகி ஆகிய 2 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் மதுரையில் வசிக்கும் மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டு 25 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப் பதக்கம் மற்றும் 9 வெண்கல பதக்கம் உள்பட ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் 3-ஆம் இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றி பெற்ற மாணவர்களை தேசிய போட்டி ஒருங்கிணைப்பாளரான ரவி, மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவர் நாராயணன், துணைத் தலைவர் கார்த்திக், செயலாளர் பிரகாஷ் குமார் மற்றும் பயிற்சியாளர்கள் பாலமுருகன், ரகுராமன் ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *