நாளைக்கு டெடி டே…. வெள்ளை நிறத்தில் கொடுத்தா வாங்காதீங்க…. அப்புறம் வருத்தப்படுவீங்க….!!

காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்கள், வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை காதலர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினம் கொண்டாட வாரத்தின் முதல் நாள்- ரோஸ் டே, இரண்டாவது நாள்-புரோபோஸ் டே, முன்றாவது நாள்-சாக்லேட் டே,  நான்காவது நாள்-டெடி டே, ஐந்தாவது நாள்-பிராமிஸ் டே, ஆறாவது நாள்-ஹக் டே, இறுதி நாளான ஏழாவது நாள்-கிஸ் டே என்று முடிகிறது. இந்த நிலையில் நாளை கொண்டாட இருக்கும் டெடி டேவை முன்னிட்டு உங்கள் காதலன்/காதலிக்கு என்ன நிறத்தில் டெடியை பரிசளிக்க போகிறீர்கள். நீங்கள் பரிசு அளிக்கப் போகும் டெடியின் நிறத்திற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிகப்பு டெடி : பேரார்வம், இரக்கம், அன்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் நிறமாகிறது. காதலன் காதலிக்கு இடையே உணர்ச்சி மற்றும் அன்பில் தீவிரத்தை இது உணர்த்துகிறது.

பிங்க் டெடி :  நீங்கள் உங்கள் ஜோடியை ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ப்ளூ டெடி : கடலையும் வானத்தையும் இணைக்கும் நிறமாகும். இது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிறத்தில் டெடி பெற்றால் உங்கள் மீது அவர் ஆழமான காதலை வைத்திருக்கிறார் என்று அர்த்தமாகும்.

ஆரஞ்ச் டெடி: கொண்டாட்டம், மகிழ்ச்சி, வெளிச்சம், ஆர்வம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை இந்த நிறம் வெளிப்படுத்துகிறது. உங்களுக்கு ஆரஞ்சு கலர் டெடி கிடைத்தால் விரைவில் உங்களுக்கு லவ் ப்ரொபோஸ் வரப்போகிறது என்று அர்த்தம்.

வெள்ளை டெடி: இதன் அர்த்தம் ஏற்கனவே கமிட்டட் என்று அர்த்தமாகும். அவரை முயற்சி செய்வதில் பயன் இல்லை. அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பிரவுன் டெடி: இந்த நிறத்தில் டெடி அளித்தால் நீங்கள் அவரின் இதயத்தை காயப்படுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த பிரச்சனைக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்வு காண்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *