#தமிழ்வாழ்க.. ”இந்தி vs தமிழ்” தொடங்கியது மொழிப்போர்…… ட்வீட்_டரில்..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி குறித்து பேசிய கருத்துக்கு எதிராக  #தமிழ்வாழ்க என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருகின்றது.

மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பொறுப்பேற்றதை தொடர்ந்து ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி கொள்கையை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசின் தேர்வுகளில் இந்தி மொழி , புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழி என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக தமிழகம் இந்தியை கடுமையாக எதிர்த்து வருகின்றது. மத்திய அரசு இந்திய மொழியை திணிக்கின்றது என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. குறிப்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்ப்பதில் தமிழகம் முக்கிய பங்காற்றுகின்றது. அந்த வகையில் இந்தி நாளாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் இந்தி குறித்து பதிவிட்ட கருத்தும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்ட அந்த கருத்தில் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இதை எதிர்க்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். திமுக தலைவர் முக.ஸ்டாலினும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும் இந்தி நாளான இன்று #HindiDiwas என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகி வந்தது. காலை முதல் இந்தியளவில் ட்ரெண்டிங் ஆன அமித்ஷாவின் இந்த கருத்தையடுத்து இந்தியை திணிக்கதே என்ற இரண்டு ஹாஷ்டாக் ட்ரெண்டாகியது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக  #StopHindiImposition , #StopHindiImperialism , ஆகிய இரண்டு ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகியது. இதில் தமிழகத்தை சார்ந்த பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டும் ,  தமிழுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர்.தொடர்ந்து இந்தி எதிர்ப்பு எதிரான ட்வீட் பதிவுகளால்  #HindiDiwas என்ற ட்ரெண்டிங்கை #StopHindiImposition  என்ற ட்ரெண்டிங் முந்தி சென்றது.

பின்னர் #தமிழ்வாழ்க , என்ற புதிய ஹாஷ்டாக் ட்ரெண்டாகி தேசிய ட்ரெண்டிங்_கில் இடம் பிடித்தது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஹிந்தியை முன்னிலை படுத்தும் முயற்சியில் பாஜக ஒவ்வொருமுறையும் முயற்சிக்கும் போதெல்லாம் கடுமையான எதிப்பு தெரிவிப்பது தமிழகம் தான். அந்தவகையில் இந்தி நாளன இன்று இந்திக்கு எதிராக ட்வீட்_டரில் மொழிப்போர் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.