டீம்ல என்னதான் நடக்குது ….? கங்குலி பதில் சொல்லியே ஆகணும் ….! சுனில் கவாஸ்கர் அதிரடி ….!!!

விராட் கோலி கேப்டன்சி விவகாரம் குறித்து  பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் .

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டது  கிரிக்கெட் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட்கோலி பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .கேப்டன் விவகாரம் குறித்து விராட் கோலி கூறும் போது,” டெஸ்ட் அணி தேர்வு செய்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக தான் என்னிடம் கேப்டன்சி மாற்றம் குறித்து கூறினார்கள் என்றும், டி20 கேப்டன் பதவிலிருந்து  நான் விலகிய போது யாரும் என்னிடம் பதவி விலக வேண்டாம் என கேட்கவில்லை ” என்று கூறினார்  .

ஆனால் இதற்கு முன்பு பிசிசிஐ தலைவர் கங்குலி விராட் கோலியிடம்  டி20  கேப்டன் பதிவிலிருந்து இருந்து விலக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்ததாக தெரிவித்திருந்தார். இதனால் கேப்டன்சி விவகாரத்தில் யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது .இந்த நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தலையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ,”விராட் கோலியின் கருத்து பிசிசிஐ-யை  எந்தவிதத்திலும் சர்ச்சைக்குள் கொண்டு வரவில்லை.

ஆனால் கங்குலி, விராட் கோலியிடம் எப்போது பதவி விலக வேண்டாம் என தெரிவித்திருந்தார் என்பது தெரிய வேண்டும். அதோடு பிசிசிஐ தலைவராக அதனை தவிர்க்க வேண்டியது கங்குலியின் கடமையாகும் .இதனால் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பேசி இருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது . அப்படி இல்லையெனில் ஒரு அறிக்கை வெளியிட்டாவது  இந்த சர்ச்சைக்கு முடிவு கொண்டுவர வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.