நீங்களே இப்படி பண்ணலாமா…? இதுதான் தீர்வா…? அரசு பள்ளி ஆசிரியரின் செயல்…!!

கொரோனா நோய் தாக்கியதால் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிஷப் டேவிட் நகரில் பிரவீன் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக செதுவாலை அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று அதிலிருந்து தற்போது மீண்டு விட்டார். ஆனாலும் பிரவீன் அந்தோணி மன உளைச்சலில் இருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடி அறைக்கு சென்று டிவி பார்த்துவிட்டு அங்கேயே தூங்கி விட்டார்.

இதனையடுத்து காலையில் மாடியில் சத்தம் கேட்டதால் அவரது மனைவி ஆரோக்கிய சித்ரா அங்கு சென்று பார்த்தபோது,  அந்தோணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆரோக்கிய சித்ரா அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து அந்தோணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த பின், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஆரோக்கிய சித்ரா வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் பிரவீன் அந்தோனி கொரோனா தொற்று தாக்கியதால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் எனவும், அதனாலேயே தனது வீட்டிலிருந்த ஊஞ்சலை கழற்றி வைத்துவிட்டு இரும்புச் சங்கிலியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *