சாலையை கடந்த தேயிலை தொழிற்சாலை ஊழியர்….. விபத்தில் சிக்கி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வேடன்வாயில் பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை முடிந்து ராமையா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது கூடலூர் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ராமையா மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ராமையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சபிக் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.