அடேங்கப்பா….!…. 1,50,0,000,000…. TIK TOK ஆதிக்கம்…. புள்ளைங்க தான் கெத்து …!!

டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது.

அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 %  ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி  டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன்  பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. அதாவது 7.4 சதவிகித சீனா மக்கள் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்துகின்றனர்.

சுமார் 37.6 மில்லியன் அதாவது 6 சதவிகித டவுன்லோடுகளுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது.கேமிங் ஆப் ஆக இல்லாத செயலிகளில் வரிசையில் சர்வதேச அளவில் டிக்டாக் மூன்றாம் இடத்தில் உள்ளது.  707.4 மில்லியன் ஆப் டவுன்லோடு பயன்பாட்டாளர்களை பெற்று வாட்ஸ்அப் செயலி முதலிடத்திலும் ,  636.2 மில்லியன் டவுன்லோடுகள் பயபட்டாளர்களை பெற்று ஃபேஸ்புக் மெசெஞ்சர்இரண்டாம் இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *