டாடா மோட்டார்ஸின் புதிய கார் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் ..!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நெக்சான் க்ராஸ் மாடல் கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும்,

Image result for டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார்

உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள், செய்யப்பட்டு  ஸ்போர்ட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட் மற்றும் சில்வர் ரூஃப், ORVMகள், முன்புற கிரில், வீல் அக்சென்ட்கள் மற்றும் டெயில் கேட்டில் க்ராஸ் பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார்

மேலும், டாடா நெக்சான் க்ராஸ் காரில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் AMT வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் துவக்க விலை ரூ.7.57 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 8.17 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.