சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 2 கப்

ரவை – 1 கப்

தயிர் – 1 கப்

பச்சை மிளகாய் – 1

காரட் – 1

பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

ஓட்ஸ் க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் ஓட்ஸை மிதமானத் தீயில் வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்     கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, சீரகம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கி  பொன்னிறமாக வந்ததும் ரவையை கொட்டிக் கிளர வேண்டும்.ரவா வறுபட்டதும்  ஓட்ஸை கொட்டி கிளரி அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் இதனுடன்  காரட், உப்பு, பேக்கிங் சோடா, கொத்தமல்லி, தயிர் ஆகியவற்றை சேர்த்து இட்லி  மாவு பதத்திற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ள வேண்டும்.பின்  இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி அவித்து எடுத்தால் சுவையான ஓட்ஸ் இட்லி தயார்!!!