சுவையான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி – எளிதாக வீட்டிலேயே செய்யலாம்! 

பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தி மல்டிவிட்டமின்கள் சத்துகள் நிறைந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆரோக்கிய பானமாக இது உள்ளது. 

தேவையான பொருட்கள் : 

பலாப்பழம் – 10,
தேங்காய்ப் பால் – 1 டம்ளர்,
பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது  – 1 ஸ்பூன்,
தேன் – 1 ஸ்பூன்.

செய்முறை : 

முதலில் பலாப்பழத்தை விதைகளை நீக்கி வைத்து கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு அரைக்கவும். இந்த கலவையை வடிகட்டி அதில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும். 

இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம். இயற்கையாகவே பலாப்பழம் இனிக்கும் என்பதால் 8 – 12 மாத குழந்தைகளுக்கு இதை அப்படியே கொடுக்கலாம். தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம். அனைவரும் இந்த பலாப்பழம் நட்ஸ் ஸ்மூத்தியை குடிகலாம் ஆரோக்கியமானது.