5ஆவது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்….. 10 ஓவர் முடிவில் 52/0…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  டாஸ் வென்று பேட்டிங் தேர்வு சிறப்பாக விளையாடி வருகிறது.  

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், அடுத்த 2 போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளும் 2:2 என்ற கணக்கில் சமமாக உள்ளநிலையில்   5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் 1 : 30 மணிக்கு  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் குவித்துள்ளது . க்வாஜா 34 (36) ரன்களும், பின்ச்18 (24) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.