மிலாடி நபியை முன்னிட்டு…. டாஸ்மார்க் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

மிலாது நபியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக அல்பி ஜான் வர்கீஸ் உள்ளார். இவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 19-ஆம் தேதி நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான உரிமம் அனுமதி விதிகள் 1981 படி மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் போன்றவை மூடப்பட வேண்டும்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறி இருந்தார்.