வருகிற 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4- ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் மது கூடங்கள், மதுபான உரிம தலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய நாளில் மது விற்பனை நடைபெற கூடாது. இந்த அறிவிப்பை மீறி வருகிற 4- ஆம் தேதி மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.