குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2, எப்.எல் 3, எப்.எல் 3ஏ, எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானங்களும் அன்றைய தினத்தில் செயல்படாது. இந்நிலையில் அறிவிப்பை மீறி மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.