டாஸ்மாக் திறப்பு நேரம்… அமைச்சர் கறார் முடிவு …. IAS-களுக்கு முக்கிய உத்தரவு….!!

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதல் நிலை மேலாளர்கள்,  ஆட்சியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், டாஸ்மாக் மது கூடங்கள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் மதுகூடங்கள் திறப்பில் எந்தவித விதிமுறைகளும் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் தஞ்சையில் சைனைடு கலந்த மதுபானங்கள் குடித்ததில் இருவர் உயிரிழந்தனர். அதிகாலையே மதுகூடங்கள் திறக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

Leave a Reply